இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே பார்டர் கவாஸ்கர் போட்டி தொடங்கிய நிலையில் இன்று கடைசி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இருந்து கேப்டன் ரோஹித் சர்மா விலகியா நிலையில் புதிய கேப்டனாக பும்ரா செயல்படுகிறார். ஆனால் தற்போது மருத்துவமனைக்கு செல்வதற்காக மேட்சில் பாதியிலிருந்து பும்ரா வெளியேறியுள்ளார். இதன் காரணமாக விராட் கோலி அணியை நடத்துகிறார். இந்நிலையில் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அதற்கு அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
அதாவது டெஸ்ட் போட்டிகளில் இருந்து தற்சமயம் விலகி இருப்பதாகவும் ஓய்வு பெறுவதாக தான் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை எனவும் பும்ரா கேப்டன்சி தனக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் கூறினார். அதன் பிறகு கையில் பேனா, மைக் மற்றும் லேப்டாப் வைத்திருக்கும் யாரோ ஒருவர் சொல்வது உங்களுடைய வாழ்க்கையை மாற்றாது. இந்த விளையாட்டை நாங்கள் நீண்ட காலமாக விளையாடி வருகிறோம். எப்பொழுது செல்ல வேண்டும். எப்பொழுது விளையாடக் கூடாது. எப்பொழுது Dougout-ல் உட்கார வேண்டும் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். எப்பொழுது கேப்டன்சி செய்ய வேண்டும் என்பதை இவர்கள் தீர்மானிக்க கூடாது. நான் அனுபவம் உள்ளவன். இரு குழந்தைகளின் தந்தை. மேலும் என்னுடைய வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு நன்றாக தெரியும் என்று கூறியுள்ளார்.