சபை தொடங்கியதுமே வேல்முருகன் ஆளுநருக்கு எதிரான கோஷமிட்டார். தமிழ் தாய் வாழ்த்து முடிந்து ஆளுநர் பேச தொடங்கிய சமயத்தில் அதிமுகவினர் அரசுக்கு எதிராகவும், வேல்முருகன் காங்கிரஸ் கட்சியினர் ஆளுநருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இதனால் ஆளுநரால் தனது உரையை தொடர முடியவில்லை. அதே நேரத்தில் ஆளுநர் தேசிய கீதத்தை பாட வேண்டும் என்று சொல்லியும் அதற்கான எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் தனது உரையை நிகழ்தாமலே ஆளுநர் கிளம்பிவிடார்
வந்த வேகத்தில் திரும்பிய ஆளுநர்!ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் வந்த வேகத்தில் புறப்பட்டு சென்றிருக்கிறார்.
இன்று ஆளுநர், சட்டமன்றத்துக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது. ஆளுநர் தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவர் மற்றும் மாண்புமிகு சபாநாயகர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் மறுத்துவிட்டனர். இறுதியில் தான் தேசிய கீதம் பாடப்படும் என்றனர். இதனால் அவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர்.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவரும், எம்.எல்.ஏ-வுமான செல்பவப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, ``தமிழக ஆளுநர் சட்டப் பேரவைக்கு வந்தபோது, அவருக்கு ஜனநாயகத்தின் அடிப்படையில் கருப்பு பேட்ச் அணிந்து எதிர்ப்பு தெரிவித்தோம். தொடந்து தமிழ்நாட்டின் நலனில் அக்கறையில்லாதவராக, தொடர்ந்து எதிரான நிலையில் இருக்கிறார். மும்மொழி ஆதரவு, தேசிய கல்விக் கொள்கையை கொண்டுவர முயற்சிக்கிறார்." என்றார்.
யார் அந்த சார்? எடப்பாடி பழனிசாமிதமிழக சட்டப்பேரவை இன்று கூடும் நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் கூட்டத்தில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது அதன்படியே அ.தி.மு.க உறுப்பினர்கள் இன்று சட்டமன்றத்திற்கு வருகையில், யார் அந்த சார்? என்ற வாசகம் பொறிக்கப்பட்ட சட்டையுடன் அவைக்கு வந்துள்ளனர்
இன்று ஆளுநர் உரை..!2025ம் ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டின் முதல் சட்டசபைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. 45 நிமிடங்கள் வரை தயாரிக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு மொழிபெயர்த்து வாசிப்பார். ஆளுநர் உரை முடிந்த பிறகு, சமீபத்தில் காலமான ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. இளங்கோவன் மறைவிற்கும், மற்ற பிற முன்னாள் உறுப்பினர்களின் மறைவிற்கும் இரங்கல் தெரிவித்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்திவைக்கப்படும்.
ஆளுநர் ரவிஅதற்கு அடுத்த நாள்களில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து விவாதம் பேரவையில் மேற்கொள்ளப்படும். ஏற்கெனவே தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. கடந்த கால ஆளுநர் உரையின் போது தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த சிலப் பகுதிகளை புறக்கணித்து வாசித்திருந்தார். ஒரு சமயத்தில், சட்டமன்றத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தார். இதெல்லாம் அப்போது அரசியல் அரங்கில் விவாதமானது. அதனால் இந்த சட்டமன்றக் கூட்டத் தொடர் பரபரப்பாக கவனிக்கப்படுகிறது.