சென்னை பேருந்துகளில் சிங்காரச் சென்னை ஸ்மார்ட் அட்டை திட்டம்: தொடங்கும் நாள் அறிவிப்பு..!
WEBDUNIA TAMIL January 06, 2025 05:48 PM



சென்னையில் பேருந்து மெட்ரோ மற்றும் மின்சார ரயில் என மூன்று வகையான போக்குவரத்துகளிலும் பயன்படும் வகையில் உருவாக்கப்பட்ட உள்ள சிங்கார சென்னை ஸ்மார்ட் கார்டு திட்டம் நாளை முதல் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

தற்போது மெட்ரோ ரயில் சேவைகளில் மட்டும் பயன்படுத்தப்படும் இந்த திட்டம் நாளை முதல் பேருந்துகளிலும் கொண்டு வரப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னையை பொருத்தவரை மெட்ரோ ரயில், புறநகர் ரயில் மற்றும் மாநகர பேருந்துகள் என மூன்று வகையான போக்குவரத்து வசதி இருக்கும் நிலையில் நவீன டெக்னாலஜியை பயன்படுத்தி பயணிகளின் சிரமத்தையும் குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில் மற்றும் மின்சார ரயில் ஆகிய மூன்றுக்கும் பயன்படுத்தும் வகையில் ஸ்மார்ட் அட்டை திட்டம் அறிமுகம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் முழு வீட்டில் நடந்து வந்த நிலையில் தற்போது நாளை முதல் இந்த திட்டம் மூன்று வகையான போக்குவரத்துகளிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தனித்தனியாக பயண சீட்டு எடுப்பதற்கு பதிலாக ஒரே டிக்கெட்டில் மூன்று வகையான போக்குவரத்தையும் இனி பயன்படுத்தலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நாளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் பல்லவன் பணிமனையில் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.


Edited by Siva
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.