காதலியை கரம்பிடித்தார் உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன்… குவியும் வாழ்த்துக்கள்..!!
SeithiSolai Tamil January 06, 2025 06:48 PM

உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் (34). இவர் நார்வே நாட்டைச் சேர்ந்தவர். இவர் தற்போது தன்னுடைய காதலி விக்டோரியா மாலோனை (26) திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுடைய திருமணம் கடந்த சனிக்கிழமை நார்வே நாட்டில் உள்ள ஒரு தேவாலயத்தில் நடைபெற்ற நிலையில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர்.

இவர்களுடைய திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த ஜோடிகளுக்கு பலரும் திருமண வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.