இந்திய கிரிக்கெட்டில் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர் அஸ்வின். இவர் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து வெளியேறினார். டெஸ்டில் கும்பிளேவுக்கு அடுத்தபடியாக அதிக விக்கெட் எடுத்தவர் இவர் தான். அத்துடன் இவர் 6 சதம், 14 அரை சாதத்துடன் 3503 ரண்களும் எடுத்துள்ளார். அப்படிப்பட்ட இவரை தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டி தொடரின் பாதியிலேயே ஓய்வு அறிவித்தது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று முன்னாள் வீரர் அணில் கும்பலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ரவிச்சந்திரன் அஸ்வின் மேட்ச் வின்னர், அவர் தன்னுடைய கெரியர் முழுவதையும் அசத்தியவர். ஒவ்வொரு முறையும் அவர் தன்னைத்தானே மெருகேற்றி பேட்ஸ்மேன்களை திணறடித்து இருக்கிறார்.
ஆனால் இந்திய அணி நிர்வாகம் இங்கிலாந்து, தென்கொரியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கவில்லை. இது மிகவும் ஆச்சரியம் அளிக்கிறது. ஜடேஜாவும் அவரும் ஜோடியாக ஒவ்வொரு போட்டியிலும் விளையாடி இருக்க வேண்டும். அஸ்வின் தான் விளையாடிய அனைத்துப் போட்டியிலும் விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அவர் இந்திய துணை கண்டத்தில் மட்டுமே அசத்துவார் என்று நினைப்பது நியாயமற்றது. அப்படி நீண்ட காலம் விளையாடியவர்கள் வெற்றிகரமாக வழி அனுப்ப வேண்டும். ஆனால் அதை பெறாமல் அஸ்வின் வெளியேறியது எனக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. கடந்த காலத்திலும் இதேபோன்று பலவீரர்கள் வெளியேறி உள்ளனர். அஸ்வின் உருவாக்கியுள்ள வரைமுறையில் மற்றவர்கள் விளையாடுவது எளிதல்ல அவர் இந்திய அணிக்காக வேறுபாடு இல்லாமல் சேவை செய்தார் என்று கூறினார்.