முதல்வர் நிகழ்ச்சியில் கருப்பு துப்பட்டா அகற்றப்பட்டது ஏன்? காவல்துறையினர் விளக்கம்..!
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் சிந்து சமவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட போது, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவிகள் சிலர் கருப்பு துப்பட்டா அணிந்திருந்தனர். இதனை அடுத்து, கருப்பு துப்பட்டா அணிந்து வந்த மாணவிகளிடமிருந்து பாதுகாப்பு பிரிவு போலீசார் அதை வாங்கி வைத்தனர்.
நிகழ்ச்சி முடிந்த பின்னரே அந்த துப்பட்டாக்கள் ஒப்படைக்கப்பட்டன. காவல்துறையினரின் இந்த செயலுக்கு தமிழக பாஜக கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், இதுகுறித்து போலீசார் விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில், பணியில் இருந்த காவலர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட்டதால் இந்த நிகழ்வு நிகழ்ந்ததாக தெரிகிறது. விழா அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்ட நபர்களை சோதனை செய்த போலீசார், கருப்பு துப்பட்டா அணிந்து வந்த ஒரு இடத்தில் துப்பட்டாவை வாங்கி வைத்தனர்.
இனிமேல் இந்த மாதிரி தவறுகள் நடக்காமல் இருக்க, பாதுகாப்பு சென்னை போலீஸ் பிரிவுக்கு தகுந்த அறிவுரைகள் கூறப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Siva