சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்கள் தடையை மீறி போராடுவதாக காவல்துறையினர் கைது செய்த நடவடிக்கை எடுக்கிறார்கள். முன்னதாக அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இன்று மீண்டும் அதிமுக சார்பில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்பாக போராட்டம் நடைபெற்றது. அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் போராட்டம் நடைபெற்ற நிலையில் அவர்கள் மாணவர்களுக்கு கருப்பு பேட்ஜ் வழங்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் போலீசார் அவர்களை கேட் அருகே வந்தபோது மடக்கி கைது செய்தனர். மேலும் போலீசார் போராட்டத்திற்கு அனுமதி கொடுக்காத நிலையில் அவர்கள் போராடி வருவதால் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.