கேரள மாநிலம் கொச்சியிலிருந்து நேற்று எல்பிஜி கேஸ் ஏற்றிக்கொண்டு ஒரு டேங்கர் லாரி கிளம்பிய நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வந்தது. இந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த நிலையில் அந்த கேஸ் வைத்திருந்த டேங்கர் மட்டும் தனியாக கழன்று கீழே விழுந்த நிலையில் அதிலிருந்து கேஸ் வெளியானது. பின்னர் தீயணைப்பு துறையினர் ஆபத்து ஏற்படாமல் இருக்க அதன் மீது தண்ணீரை ஊற்றினர். தொடர்ந்து கேஸ் வெளியேறிய நிலையில் 500 மீட்டர் சுற்றளவிற்கு உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.
பின்னர் டேங்கர் கேஸ் அங்கிருந்து அகற்றப்பட்டது. இந்த சம்பவம் நேற்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது விபத்து தொடர்பாக அந்த லாரி ஓட்டுநர் இராதாகிருஷ்ணனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அந்த லாரி ஓட்டுனரின் அஜாக்கிரதை காரணமாகத்தான் விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் அவர் மருத்துவமனையில் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று நள்ளிரவில் அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்