புத்தாண்டை கொண்டாட்ட அழைப்பிதழுடன் ஆணுறை மற்றும் ORS கரைசலை பப் நிர்வாகம் அனுப்பப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் உள்ள பப் ஒன்றில் இருந்து இந்த விசித்திர அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. இதனை அடுத்து, குறித்த பப் நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி புனே காவல்துறை ஆணையர் அமிதேஷ் குமாரிடம் மகாராஷ்டிர பிரதேச இளைஞர் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய மகாராஷ்டிர பிரதேச இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் அக்ஷய் ஜெயின், "நாங்கள் பப்கள் மற்றும் இரவு நேர கொண்டாட்டங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. இருப்பினும், இளைஞர்களை கவரும் இத்தகைய மார்க்கெட்டிங் உத்தி புனே நகரத்தின் மரபுகளுக்கு எதிரானது என்று கூறியுள்ளார்.
மேலும், இவ்வாறு ஆணுறை மற்றும் ORS கரைசலை அனுப்பிய பப் நிர்வாகத்திற்கு எதிராக காவல்துறை கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என்றும் அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.