பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 02வது சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா, கஜகஸ்தானின் யுலியா புடின்ட்சேவா உடன் மோதினார்.
இதில் சபலென்கா 07-06 (07-02), 06-04 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
நாளை நடைபெறும் காலிறுதி சுற்றில் சபலென்கா, செக் வீராங்கனை மேரி பசவுஸ்கோவாவை எதிர்கொள்ளவிருக்கிறார்.
அத்துடன், ஆஸ்திரேலிய ஓபனுக்கு முன்னதாக நோவக் ஜோகோவிச் மற்றும் அரினா சபலெங்கா ஆகியோர் தங்களது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அத்துடன், ஜோகோவிச் 06-03, 06-03 என்ற நேர் செட்களில் கேல் மான்ஃபில்ஸுக்கு எதிராக 72 நிமிடங்களில் வெற்றி பெற்றார், அதே நேரத்தில் ஆண்ட்ரீவா மற்றும் எம்பெட்ஷி பெரிகார்ட் ஆகியோரும் அபாரமாகி ஆடினர்.
உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான சபலென்கா நாளை கஜகஸ்தானின் யுலியா புடின்ட்சேவா வை எதிர்கொண்டு வெற்றிபெறுவர் என்று கூறப்படுகிறது.