டெல்லி மாநில சட்டமன்றத் தேர்தலின் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே, ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் பரஸ்பர குற்றச்சாட்டுகளை வைக்க ஆரம்பித்துள்ளனர். கட்சியின் ஒருங்கிளப் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் பாஜக குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறது. தன் மீது குற்றச்சாட்டுகளை வைக்கும் பாஜக மற்றும் காங்கிரஸ் அவர்களுடைய கூட்டணியை முறைப்படி அறிவிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, ஒரு சில ஊடகங்களை தவிர மக்கள் காங்கிரஸை பற்றி பெரிதாக பேசுவது இல்லை. மேலும் சட்டமன்றத் தேர்தலுக்காக இரு கட்சிகளும் மறைமுகமாக கூட்டணி வைத்துள்ளனர். அந்த இரு கட்சிகளும் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும், இந்த ரகசிய ஒத்துழைப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார். பாராளுமன்றத் தேர்தலின் போது ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடம் பிடித்திருந்தன, அரியானா சட்டமன்றத் தேர்தலின் போது இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டது, டெல்லியிலும் அப்படித்தான்.
சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான், ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக 12 பக்க வெள்ளை அறிக்கை வெளியிட்டார். அதோடு கெஜ்ரிவால் இந்த நாட்டிற்கு எதிரானவர் என்றும் கூறினார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லை என்றால் இந்திய கூட்டணியில் உள்ள கட்சிகள் காங்கிரசை வெளியேற்ற வேண்டும் என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இன்று காலை அவரது வீட்டிற்கு முன்பு, மாதந்தோறும் பெண்களுக்கு வழங்கும் ஆயிரம் ரூபாய் பணம் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று சிலர் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக பேசிய அவர் அந்த பெண்கள் காங்கிரஸ் மற்றும் பாஜகவை சேர்ந்தவர்கள் என்றும், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்றும் கூறினார். பஞ்சாபின் அனைத்து பெண்களும் கட்சியுடன் இருக்கிறார்கள். அவர்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்றார்.