வாசிக்க தான் முடியும்…. ஆளுநருக்கு கருத்து சொல்ல அனுமதி இல்லை…. பேரவை தலைவர் அப்பாவு விளக்கம்….!!
SeithiSolai Tamil January 07, 2025 07:48 AM

தமிழக சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். இன்று காலை பேரவை மண்டபத்திற்கு வருகை தந்த ஆளுநரை தலைவர் அப்பாவு வரவேற்றார். இந்த நிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். தமிழ் தாய் வாழ்த்து இசைக்க பட்டவுடன் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்பதால் ஆளுநர் வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கூறியதாவது அரசமைப்பு விதி 176(1) படி ஆளுநர் உரை வாசிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

ஆளுநர் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி இருக்க வேண்டும். தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஆளுநர் இப்படி செய்து இருக்கிறார். அவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தோம். இதுவரை எந்த ஆளுநரும் இப்படி செய்ததில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மட்டும்தான் பேரவையில் கருத்து சொல்ல அனுமதி உண்டு. கூட்டத்தொடரின் போது ஆளுநர் உரையை படிப்பதை தவிர வேறு கருத்து சொல்வதற்கு அனுமதி கிடையாது என அப்பாவு கூறியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.