அடுத்த அதிர்ச்சி... அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் பெண் மருத்துவர் பலாத்காரம்... சக மருத்துவா் வெறிச்செயல்!
Dinamaalai January 08, 2025 12:48 PM

கொல்கத்தாவில் மருத்துவ கல்லூரி பயிற்சி மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட கொலைச் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அடுத்த அதிர்ச்சியாக மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில், அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் இளநிலை பெண் மருத்துவா், சக மருத்துவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடா்பாக அந்த மருத்துவரைக் காவல் துறையினா் கைது செய்தனா்.

இது தொடா்பாக குவாலியா் நகர காவல் துறை கண்காணிப்பாளா் அசோக் ஜடோன் கூறுகையில், “குவாலியா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தோ்வுக்காக வந்த 25 வயதுடைய இளநிலை பெண் மருத்துவா் ஒருவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கல்லூரியின் பெண்கள் விடுதியில் தங்கி இருந்துள்ளாா்.

விடுமுறை தினம் என்பதால் விடுதியில் அதிகமான மாணவிகள் இல்லை. அந்த நேரத்தில் அவருடன் படித்த சக மருத்துவா் ஒருவா், அவரிடம் பேச வேண்டுமென்று கூறி வெளியே அழைத்து சென்றுள்ளாா்.

அதனை நம்பிச் சென்ற அந்த இளநிலை பெண் மருத்துவரை அதே வளாகத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த கட்டடத்துக்கு அழைத்துச் சென்று மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி இருக்கிறார்.

இந்த சம்பவம் தொடா்பாக அந்த இளநிலை பெண் மருத்துவா் திங்கள்கிழமை காலையில் காவல் துறையில் புகாா் அளித்தாா். அதன்படிப்படையில் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து குற்றச்சாட்டுக்கு உள்ளான சக மருத்துவரைக் கைது செய்தனா். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.