கோவை மாவட்டத்தை சேர்ந்த 82 வயதான மூதாட்டி கிட்டம்மாள். இவர் தனது பேரன்கள் உடற்பயிற்சி செய்வதை பார்த்து மூதாட்டி கிட்டம்மாள் வார இறுதி நாட்களில் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்ய தொடங்கியுள்ளார். இந்நிலையில் நேச்சுரல் ஸ்ட்ராங் பவர்லிப்டிங் பெடரேசன் பளு தூக்கும் போட்டி நடத்தியுள்ளது.
இந்த போட்டியில் 50 கிலோ எடை பிரிவில் கிட்டம்மாள் பங்கேற்றுள்ளார். மேலும் இந்த போட்டியில் அவர் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.