“நம்ப வச்சு ஏமாத்திட்டாங்க…” வாலிபருடன் வந்து ஆதாரத்துடன் புகார் அளித்த பெண்…. போலீஸ் விசாரணை…!!
SeithiSolai Tamil January 08, 2025 12:48 PM

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொட்டி ரெட்டிப்பட்டியில் கவின் குமார் என்பவர் வசித்து வருகிறார். இதேபோல எருமைப்பட்டி ஊரில் ரங்கா ஸ்ரீ என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண் தனது செல்வாக்கை பயன்படுத்தி பழனி தண்டாயுதபாணி கோவிலில் உதவியாளர் மற்றும் கணினி உதவி பொறியாளர் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறினார். இதனை நம்பி இரண்டு பேரும் கடந்த 2023 ஆம் ஆண்டு 32 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பணத்தை அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளனர். அதன்பிறகு அந்த பெண் இருவரையும் வெவ்வேறு நாட்களில் பழனி முருகன் கோவிலுக்கு அழைத்துச் சென்று பணி ஆணையை வழங்கியுள்ளார்.

இதனையடுத்து அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒருவரிடம் பணி நியமன ஆணையை கொடுத்து பணி பொறுப்பேற்க வைத்தனர். மேலும் இருவருக்கும் அடையாள அட்டையை கொடுத்து கோவிலில் இருந்து அழைப்பு வந்தபின் பணியில் வந்து சேருமாறு கூறியுள்ளனர். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் வேலை வழங்கவில்லை. இது குறித்து விசாரித்த போது பணி ஆணையும், அடையாள அட்டையும் போலியானது என்பது உறுதியானது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட இருவரும் நாமக்கல் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.