உணவில் அதிகம் பூண்டினை சேர்த்துக் கொள்வோருக்கு எந்த நோய் தாக்காது தெரியுமா ?
Top Tamil News January 07, 2025 08:48 AM

பொதுவாக  வாயு தொல்லை எப்படி ஏற்படுகிறது என்றால் நாம் சாப்பிடும்போது காற்றையும் சேர்த்து விழுங்குகிறோம் .இது 80 சதவீதம் ஏப்பமாக வெளியேறும் ,மீதி 20 சதவீதம் ஆசன வாய் வழியாக வெளியேறிவிடும் .இந்த வாயு தொல்லை நம்மை படுத்தி எடுக்காமலிருக்க சில இயற்கை வைத்ய முறைகள் உள்ளன .இந்த பதிவில் அவற்றை பற்றி பார்க்கலாம்  

1.வாயு தொல்லை உள்ளவர்கள் இஞ்சி சாற்றை காலையில் தேனீருடன் கலந்து குடிக்கலாம். அல்லது இந்த தொல்லை நீங்க இஞ்சி சாற்றை எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீருடன் கலந்து குடிக்கலாம்


 
2.வாயு தொல்லை உள்ளவர்கள் பூண்டை உபயோகிக்கலாம் .பூண்டில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
3.உணவில் அதிகம் பூண்டினை சேர்த்துக் கொள்வோருக்கு வாயு பிரச்சனைக்கு சிறந்த தீர்வு கிடைக்கும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது

4.வாயு தொல்லை உள்ளவர்கள் மருந்து கடைகளில் கிடைக்கும் திரிபலா பொடியை கொதிநீரில் ஊற வைத்து ஆறிய பின்னர் இரவு உறங்க செல்ல முன் தினமும் குடித்து வந்தால் வாயு தொல்லையில் இருந்து நிரந்த தீர்வை பெறலாம் .

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.