பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஓபெல்கா இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். அத்துடன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பெலாரசின் அரினா சபலென்கா இறுதி போட்டிக்கு முன்னேறியுளார்.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் அமெரிக்காவின் ரெய்லி ஓபெல்கா, பிரான்சின் பெரிகார்ட் உடன் மோதினார்.
இதில் ஓபெல்கா 06-03, 07-06 (7-4) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
நாளை நடைபெறும் இறுதிச்சுற்றில் ஓபெல்கா, செக் குடியரசின் ஜிரி லெஹெகாவை சந்திக்கிறார்.
அத்துடன், இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. அதில் பெலாரசின் அரினா சபலென்கா, ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா உடன் மோதினார்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சபலென்கா 06-03, 06-02 என்ற நேர் செட் கணக்கில் மிர்ரா ஆண்ட்ரீவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் சபலென்கா, ரஷியாவின் போலினா குடெர்மெட்டோவா உடன் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.