டிடிஎஃப் வாசன் தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்குவதும் உண்டு. அந்த வகையில் இவர் பல முறைகள் காவல்துறைகயினரால் கைது செய்யப்பட்ட பின் விடுவிக்கப்பட்டு இருக்கிறார். சூழல் இப்படி இருக்க இவரை வைத்து மஞ்சள் வீரன் எனும் திரைப்படத்தை இயக்க திட்டமிட்டார் இயக்குனர் செல் அம். ஆனால் ஒரு சில காரணங்களினால் இந்த படத்தில் இருந்து டிடிஎஃப் வாசன் நீக்கப்பட்டார். தற்போது அவருக்கு பதிலாக நடிகர் கூல் சுரேஷ், மஞ்சள் வீரன் படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் டிடிஎஃப் வாசன் தொட்டதெல்லாம் வெற்றியாக இருந்தது. ஆனால் சமீப காலமாக இவர் தொட்டதெல்லாம் சர்ச்சைகளாக மாறி அவருக்கு சிக்கலாக போய் முடிந்து விடுகிறது.
அந்த வகையில் தற்போது அவர், பாம்பு ஒன்றை கையில் வைத்து வீடியோ ஒன்றினை வெளியிட்டு இருந்தார். அதில், “இந்த பாம்பின் பெயர் பப்பி. நான் காட்டுக்குள் ட்ரெக்கிங் சென்றபோது இது என்னையே பார்த்துக் கொண்டு இருந்ததால் அதை அப்படியே எடுத்து வந்து வளர்த்து வருகிறேன்” என்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆனால் அதே சமயம் பாம்பை வீட்டில் வளர்ப்பது சட்டப்படி குற்றம் என்பதால் அவர் மீது வனத்துறை ஆக்ஷன் எடுக்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். சட்ட வல்லுநர்கள் ஆலோசனையோடு வனத்துறை அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெற்றே தான் பாம்பை வீட்டில் வளர்த்து வருவதாக வாசன் தெரிவித்துள்ளார்.
இதனால் டிடிஎஃப் வாசன் தப்பித்திருந்தாலும், அவர் வீடியோவில் சொன்ன ஒரு தகவலால், சென்னை திருவொற்றியூரில் உள்ள செல்லப் பிராணிகள் விற்பனை கடையில் வனத்துறை அதிரடி சோதனை நடத்தி உள்ளது. டி.டி.எப் வாசன் கையில் பாம்பு உடன் வெளியிட்ட வீடியோவில், சில நாட்களுக்கு முன்பு இங்கு, தனது பாம்புக்கு கூண்டு வாங்கிச் சென்றதாகவும், பாம்பும் விற்கப்படுவதாகவும் கூறியிருந்தார். அவர் சொன்ன தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட கடையில் இன்று வனத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். திருவொற்றியூரில் உள்ள செல்லப் பிராணிகள் விற்பனை கடையில் வனத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அரியவகை கிளி மற்றும் ஆமையை கைப்பற்றி உள்ளனர்.