ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி சொதப்பி வரும் நிலையில் முதல் தொடரில் பும்ரா கேப்டனாக செயல்பட்ட நிலையில் தற்போது கடைசி தொடரிலும் அவர் கேப்டனாக செயல்படுகிறார். அதாவது முதல் போட்டியில் ரோகித் சர்மா கலந்து கொள்ளாத நிலையில் கடைசி டெஸ்ட் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதன் காரணமாகும் பும்ரா கேப்டனாக இருக்கும் நிலையில், தற்போது போட்டி நடந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு ஒரு ஓவர் மட்டுமே வீசிவிட்டு மருத்துவமனைக்கு கிளம்பியுள்ளார். அவர் ஸ்கேன் எடுப்பதற்காக மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படும் நிலையில் தற்போது அணியை விராட் கோலி வழிநடத்துகிறார். மேலும் நேற்று இந்திய அணி ஆல் அவுட் ஆன நிலையில் தற்போது இந்த தகவல் இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.