டெல்லியில் மாநில சட்ட மன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் பரஸ்பர குற்றச்சாட்டுகளை கூற ஆரம்பித்துள்ளன.
ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவை கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.
தன்மீது குற்றச்சாட்டுகளை கூறும் பாஜக மற்றும் காங்கிரஸ் அவர்களுடைய கூட்டணியை முறைப்படி அறிவிக்க வேண்டும் என கெஜ்ரிவால் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கெஜ்ரிவால் கூறுகையில் "ஒரு சில ஊடகவியலாளர்களைத் தவிர மக்கள் காங்கிரஸ் கட்சியை பற்றி பெரிதாக பேசுவதை நிறுத்திவிட்டார்கள். சட்டமன்றத் தேர்தலுக்காக இரு கட்சிகளும் மறைமுகமான, திரைக்குப் பின்னால் கூட்டணி வைத்துள்ளன என அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகியவை ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன், இந்த ரகசிய, திரைக்குப் பின்னால் உள்ள ஒத்துழைப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது" என்ரம் குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை பஞ்சாபில் மாதந்தோறும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் பணம் தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் சில பெண்கள் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின்முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக கெஜ்ரிவால் கூறுகையில் "அந்த பெண்கள் காங்கிரஸ் மற்றும் பாஜகவை சேர்ந்தவர்கள். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ''பஞ்சாபின் அனைத்து பெண்களும் ஆம் ஆத்மி கட்சியுடன் நிற்கிறர்கள். அவர்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்" என்று அறிவித்துள்ளார்.
மேலும், பாராளுமன்ற தேர்தலின்போது இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் இடம் பிடித்திருந்தன. அரியானா சட்டமன்ற தேர்தலின்போது இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டது. டெல்லியிலும் தனித்தனியாக போட்டி என அறிவித்துள்ளன.
சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான், கெஜ்ரிவாலை நாட்டிற்கு எதிரானவர் எனத் தெரிவித்ததோடு, ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக 12 குறிப்புகள் அடங்கிய வெள்ளை அறிக்கை வெளியிட்டார். இதுவும் தற்போது பேசப்பட்டு வருகிறது.
இதனால் காங்கிரஸ் கட்சி அஜய் மக்கான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் காங்கிரஸை வெளியேற்ற வேண்டும் என கெஜ்ரிவால் தெரிவித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.