Vidaamuyarchi: மகிழ் திருமேனி இயக்கதில் அஜித் நடிக்க கடந்த வருடம் ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்ட படம் விடாமுயற்சி. அதன்பின் கதை இதுதான் என உறுதி செய்யவே சில மாதங்கள் ஆனது. எனவே, அஜித் பைக்கில் உலகை சுற்றப்போனார். அஜித்தும், மகிழ் திருமேனியும் மாறி மாறி பேசியும் கதை உறுதியாகவில்லை. அதன்பின்னர்தான் ஹாலிவுட் படமான பிரேக் டவுன் படத்தின் கதையை சுட்டு படமாக எடுக்க துவங்கினார்கள்.
ஆனால், அந்த கதையை அப்படியே எடுக்காமல் கதையில் சில மாற்றங்களை செய்து ஷூட்டிங் போனார்கள். அஜர் பைசான் நாட்டில் படப்பிடிப்பு துவங்கியது. திரிஷா, அர்ஜூன் உள்ளிட்ட பலரும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பல காரணங்களால் படப்பிடிப்பு தடைப்ட்டது.
ஒரே நேரத்தில் விடாமுயற்சி, வேட்டையன், இந்தியன் 2, லால் சலாம் ஆகிய பல படங்களை லைக்கா நிறுவனம் தயாரித்ததால் நிதி நெருக்கடியில் சிக்கியது. இதில், இந்தியன் 2 படமும் லால் சலாம் படமும் ஓடவில்லை. வேட்டையன் படம் பெரிய லாபம் இல்லை. எனவே, விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு சில மாதங்கள் நடக்கவில்லை.
அஜித்தும் தன்னால் முடிந்த ஒத்துழைப்பை கொடுத்தார். ஆனால், தவறு முழுக்க லைக்கா மீது இருந்தது. எனவே, விடாமுயற்சி படத்தை விட்டுவிட்டு குட் பேட் அக்லி படத்திற்கு போனார் அஜித். அந்த படத்தின் படப்பிடிப்பே முடிந்துவிட்டது. ஆனால், விடாமுயற்சிக்கு இன்னமும் விடிவுகாலம் பிறக்கவில்லை.
ஒருவழியாக 2025 பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என அறிவித்தார்கள். எனவே, அஜித் ரசிகர்கள் உற்சாகமானார்கள். ஆனால், திடீரென சில காரணங்களால் படம் பொங்கலுக்கு வெளியாகாது என லைக்கா நிறுவனம் அறிவித்து அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. எனவே, லைக்கா நிறுவனத்தை அஜித் ரசிகர்கள் திட்டி வருகிறார்கள்.
விடாமுயற்சி பாடம் ரிலீஸ் ஆவாவதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. ஏற்கனவே Break Dawn படத்தை தயாரித்த பாரமண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் லைக்காவுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. அந்த பஞ்சாயத்தே இன்னும் முடியவில்லை. அதோடு, வேட்டையன் படத்தை வெளியிட்டதில் சில வினியோகஸ்தர்களுக்கு லைக்கா நிறுவனம் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டியிருக்கிறதாம். அவர்கள் எல்லாம் விடாமுயற்சி படத்தை வெளியிட விட மாட்டாரக்ள் என சொல்லப்படுகிறது. இப்படி எல்லாம் சேர்ந்ததால்தான் படத்தின் வெளியீட்டை தள்ளி போட்டுவிட்டார்கள் என்கிறார்கள்.
அனேகமாக குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 23ம் அல்லது பிப்ரவரி மாதத்தில் விடாமுயற்சி படத்தை வெளியிட திட்டமிட்டு வருவதாக செய்திகள் கசிந்துள்ளது.