இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக தேவஜித் சகியா நியமிக்கப்பட்டுளார்..!
Seithipunal Tamil January 05, 2025 05:48 AM

இந்திய கிரிக்கெட் வாரியத்தின்  செயலாளராக தேவஜித் சகியா இடைக்கால  நியமிக்கப்பட்டுளார். செயலாளராக  இருந்த ஜெய் ஷா  ஐசிசி தலைவராக தேர்வானதால் செயலாளர் பதவியில் இருந்து விலகினார்.

அத்துடன் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொருளாளராக இருந்த ஆஷிஷ் ஷெலார் மகாராஷ்டிரா மாநில மந்திரியாகிவிட்டார்.

இதனால் குறித்த இரண்டு பதவிகளும் காலியாக இருந்தன. இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு,இன்று மாலை 04 மணி வரை விண்ணப்பிக்க முடியும்என பிசிசிஐ தெரிவித்திருந்தது. 

இந்த நிலையில் தேவஜித் சைகியா செயலாளர் பதவிக்கும், பிரப்தேஜ் பாட்டியா பொருளாளர் பதவிக்கும் விண்ணப்பித்திருந்தனர்.

மற்ற யாரும் விண்ணப்பிக்கவில்லை. இதனால் தேவஜித் சைகியா இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராகவும், பிரப்தேஜ் பாடியா பொருளாளராகவும் பதவி ஏற்க வாய்ப்புள்ளது.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.