திருவள்ளுவர் திருநாளன்று வழங்கப்படவுள்ள 2025-ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது, பேரறிஞர் அண்ணா விருது, மகாகவி பாரதியார் விருது, தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, முத்தமிழறிஞர் கலைஞர் விருது உள்ளிட்ட ஒன்பது விருதுகளுக்குரிய விருதாளர்கள் தேர்வு செய்தது தமிழ்நாடு அரசு. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 15 தேதி அன்று வழங்கி சிறப்பிக்க உள்ளார்கள்.
திருவள்ளுவர் விருதுக்கு புலவர் மு.படிக்கராமு அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அண்ணா விருதுக்கு எல். கணேசன், பாரதியார் விருதுக்கு கவிஞர் கபிலன், பாரதிதாசன் விருதுக்கு பொன். செல்வகணபதி, திருவிக விருதுக்கு ஜி.ஆர் ரவீந்திரநாத், பெரியார் விருதுக்கு விடுதலை ராஜேந்திரன், அம்பேத்கர் விருதுக்கு ரவிக்குமார் எம்.பி, விசுவநாதம் விருதுக்கு பொதியவெற்பன், கலைஞர் விருதுக்கு முத்து வாவாசி தேர்வாகியுள்ளனர்.