கதிர் ஆனந்த் கல்லூரியில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு.. கைப்பற்றப்பட்ட பொருள்கள் என்ன?
Webdunia Tamil January 05, 2025 04:48 PM

அமைச்சர் துரைமுருகன் மகன் மற்றும் திமுக எம்பி கதிர் ஆனந்த் அவர்களுக்கு சொந்தமான பொறியியல் கல்லூரியில் கடந்த இரண்டு நாட்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த கல்லூரியில் இருந்து பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது 44 மணி நேரம் சோதனை முடிவுக்கு வந்ததாகவும், சோதனையின் முடிவில் எட்டு கார்களில் வந்த பதினைந்துக்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை 2.40 மணியளவில் துணை ராணுவ படையினரின் பாதுகாப்புடன் புறப்பட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த சோதனையில் கல்லூரி தொடர்பான ஆவணங்கள், வங்கி பரிவர்த்தனை சார்ந்த ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் ஆகியவைகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி சென்றுள்ளதாகவும், இந்த ஆவணங்களில் உள்ள விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

அமைச்சர் துரைமுருகன், கதிர் ஆனந்த் வீட்டில் மற்றும் அவருக்கு சொந்தமான ஐந்து இடங்களில் ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை முடித்த நிலையில், தற்போது கல்லூரியிலும் சோதனையை முடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.