வேகமெடுக்கும் HMPV வைரஸ் பரவல்... மாஸ்க் அணிவது கட்டாயம்.. உடனடியாக அமலுக்கு வந்த உத்தரவு!
Dinamaalai January 07, 2025 11:48 AM

HMPV வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், பெங்களூருவில் வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றூ அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் சென்னை உட்பட நாடு முழுவதுமாக 5 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது. வஇந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் இரு குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. வைரஸ்  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கர்நாடகா அரசு முக்கிய செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், “பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். கூட்ட நெரிசலான இடங்களில் முகக்கவசம் அணிவதன் மூலம் தொற்று பரவலைக் குறைக்க முடியும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் ” எச்.எம்.பி.வி பாதிக்கப்பட்ட 8 மாத குழந்தை நலமாக உள்ளது” எனவும் தெரிவித்துள்ளார்.  மேலும் "இது புதிய வைரஸ் அல்ல. இது முதல் முறையாக கண்டறியப்படுவதும் இல்லை. இந்த வைரஸ் 2001 ல் நெதர்லாந்தில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. குறிப்பிட்ட வகை மக்களுக்கு இந்த வைரஸ் சுவாச பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இதனால் பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை என  அறிவுறுத்தியுள்ளார்.  அத்துடன் மருத்துவ அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தி, ஐ.சி.எம்.ஆர் மற்றும் மத்திய அரசுடன் மேலும் கூட்டம் நடத்துமாறு அறிவுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்." 

முதல்வர் சித்தாராமய்யா இது குறித்து "இரண்டு குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  எனக்கு இது தெரிந்தவுடன், தினேஷ் குண்டு ராவிடம் பேசியதில்   அவர் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் செயல்படுத்தப்படும். நோய் பரவலைத் தடுக்க அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்" எனக் கூறியுள்ளார்.   தொற்று பரவலைக் குறைக்க பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் எனவும் கர்நாடகா அரசு அறிவுறுத்தியுள்ளது.  

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.