இதுக்கெல்லாம் இப்படி முடிவெடுத்தா எப்படிப்பா? வாலிபர் பரிதாபம்!!
A1TamilNews January 08, 2025 02:48 PM

திருவண்ணாமலையில் திருமணம் செய்து வைக்கக் கோரி இளைஞர் எடுத்த விபரீத முடிவு அவருடைய உயிருக்கே உலை வைத்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா பெரியபாலியப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் 29 வயது விஜயகுமார். சிறு வயதிலேயே போலியோ ஏற்பட்டதால் வலது கை மற்றும் காலில் சிறிது ஊனம் ஏற்பட்டுள்ளது. தந்தை ராமுவிடம் தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறு விஜயகுமார் கேட்டுக் கொண்டே இருந்துள்ளார். மாற்றுத் திறனாளி என்பதாலோ என்னவோ அவருடைய திருமணம் தள்ளிக் கொண்டே போயிருக்கிறது. திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்டு அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மிரட்டல் விடுக்கும் வகையில் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீவைத்துள்ளார். டிசம்பர் 29ம் தேதி நடந்த சம்பவத்தில் பலத்த தீக்காயம் அடைந்த விஜயகுமாரை உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டாலும் பலனிளிக்காமல் உயிரிழந்துள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.