உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒரு வாலிபரை காதலித்து வந்துள்ளார். ஆனால் காதலுக்கு மறுப்பு தெரிவித்த இளம் பெண்ணின் பெற்றோர் அவரை கிருஷ்ணன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். ஆனால் திருமணமான சில நாட்களிலேயே அந்தப் பெண் தனது காதலன் குமாருடன் ஓட்டம் பிடித்தார். இதுகுறித்து அறிந்த குமாரின் பெற்றோர் அந்த பெண்ணை அவரது கணவர் வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்.
இதனால் குமாரும் இளம்பெண்ணை அவரது கணவரிடம் ஒப்படைத்தார். தன்னை விட்டு காதலனுடன் ஓட்டம் பிடித்ததால் கோபமடைந்த இளம் பெண்ணின் கணவர் அவரை கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கிருஷ்ணன் உள்பட நான்கு பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.