தெலுங்கானா மாநிலத்தில் நல்ல விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்ரீ சில்சை பகுதியைச் சேர்ந்த கைத்தறி தொழிலாளி. இவர் நேற்று பிரசித்தி பெற்றே திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது அவர் ஒரு வித்தியாசமான பட்டு சேலையை வழங்கினார். அதாவது ஏழுமலையானுக்கு தீப்பெட்டியில் அடங்கும் ஒரு பட்டு சேலையை அவர் வழங்கினார்.
இவர் வருடம் தோறும் இந்த சேலையை திருப்பதி ஏழுமலையானுக்கும், ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோவிலுக்கும் வழங்குவது வழக்கம். இந்த பட்டு சேலை 200 கிராம் தங்கம் மற்றும் ஐந்தரை மீட்டர் நீளத்தில் வெள்ளியில் தயார் செய்யப்படுகிறது. சுமார் 48 அடி அங்குலம் இருக்கும் நிலையில் இதன் மதிப்பு 20 இலட்ச ரூபாய். மேலும் இந்த சேலையை தயார் செய்ய 15 நாட்கள் ஆகும் என்று அவர் கூறியுள்ளார்.