ரஷித் கானின் நேர்த்தியான பந்துவீச்சால் டெஸ்ட் தொடரை வென்ற ஆப்கானிஸ்தான்!
Seithipunal Tamil January 07, 2025 09:48 AM

ரஷித் கானின் நேர்த்தியான பந்துவீச்சால் ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.  

இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில், முதல் இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் அணி 157 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ரஷித் கான் 25 ரன்கள் எடுத்தார். 

தொடர்ந்து ஜிம்பாப்வே அணி தனது முதல் இன்னிங்ஸில் கேப்டன் கிரைக் எர்வின் (75 ரன்) மற்றும் சிக்கந்தர் ராஸா (61 ரன்) ஆகியோரின் ஆதரவுடன் 243 ரன்களை சேர்த்து 86 ரன்கள் முன்னிலை பெற்றது.  

அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில், ஆப்கானிஸ்தான் அணி ரஹ்மத் ஷா (139 ரன்) மற்றும் இஸ்மத் ஆலம் (101 ரன்) இருவரின் சதங்களால் 363 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.  

278 ரன்கள் இலக்கை நோக்கி ஜிம்பாப்வே இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய நிலையில், கடைசி நாள் காலை ரஷித் கான் 15 பந்துகளில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 72 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வெற்றிக்கு வழி வகுத்தார்.

இதன் மூலம் 2 ஆட்டங்கள் கொண்ட தொடரை ஆப்கானிஸ்தான் 1-0 என கைப்பற்றியது. ரஷித் கான் ஆட்ட நாயகனாகவும், ரஹ்மத் ஷா தொடரின் நாயகனாகவும் தேர்வுசெய்யப்பட்டனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.