பட்டியலின மக்களை பிளவுபடுத்தும்,பெரியாரை இழிவுபடுத்தும், சுயசாதி பற்றுடைய விசிக எம்பி ரவிக்குமாருக்கு அம்பேத்கர் விருதா? என்ற கேள்வியுடன் முதல்வருக்கு தமிழ்புலிகள் அமைப்பு தந்தி அனுப்பி உள்ளதாக, அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் அனுப்பியதாக சொல்லும் அந்த தந்தியில், "சமூக நீதிக்கு சான்றாக தந்தை பெரியாரின் கொள்கையை ஏற்று முத்தமிழறிஞர் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் வழித்தோன்றலாக திராவிட மாடல் அரசாக தமிழ்நாடு அரசு திகழ்ந்து வருவதும் மற்ற மாநிலங்களுக்கே முன்னுதாரணமான அரசாகவும் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அரசு திகழ்வது தமிழ்நாட்டிற்கே பெருமையாக கருதுகிறோம்,
முத்தமிழறிஞர் அவர்கள் தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடூ முறையை பகிர்ந்தளிப்பதிலே விழிம்புநிலை சமூக மக்களின் துயர்களையும் அவர்களுக்கு இடஒதுக்கீடு இருந்தும் அதை நுகரமுடியாத சமூகமாய் இருக்கிறார்கள் என்று பட்டியல் சமூகத்தில் இருக்ககூடிய அருந்ததியர் சமூகத்திற்கு வழங்கிய 3% சதவிகித உள் ஒதுக்கீட்டை அவரது ஆட்சிகாலத்தில் 2009 ஆம் ஆண்டு சமூக நீதி சிந்தனையில் பகிர்ந்தளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது,
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சிந்தனை என்பது பெரியாரும் அம்பேத்கரையும் முன்னிருத்தியே தனது சமூகநீதியை தமிழ்நாட்டில் நிலைநாட்டினார் சாதி ஒழிப்பை முன்னிருத்தியே சமத்துவபுரம் கட்டியெழுப்பினார், இந்நிலையில் அருந்ததியர் உள் ஒதுக்கீடுக்கு எதிராக வழக்கு தொடுத்து அந்த வழக்கும் அருந்ததியர் உள் இடஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு செல்லும் என்று உச்சநீதீமன்றமே அத்தகைய மகத்தான தீர்ப்பை வழங்கியது சமூகநீதிசிந்தனை கொண்ட கலைஞர் அவர்கள் கொடுத்த அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சென்று தலைவர் கலைஞர் அவர்களின் சமூக நீதி பார்வையை அவருடைய சிந்தனையை மழுங்கடிக்கும் விதமாகவும் அம்பேத்கருக்கே எதிரான ஒரு களத்தில் நின்று சமூகநீதிக்கே எதிராகவும் திகழ்ந்த எழுத்தாளர் தோழர் ரவிக்குமார் அவர்களுக்கு அம்பேத்கர் விருதை தாங்கள் சனவரி 15-2025 அன்று வழங்குவதற்கு அறிவிப்பு செய்திருப்பது அம்பேத்கரியவாதிகளுக்கே அதிருப்பதியாக உள்ளது,
சமூக நீதிக்காக சனநாயக குரலெழுப்புகிற இடதுசாரிகள் எல்லோருக்கும் இந்த விருது அறிவிப்பு வருத்தத்தை அளிப்பதாகவும் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது,
பட்டியல் சமூகத்தில் உள்ள மக்களை சுயசாதி பற்றோடு பிரித்தாலும் எண்ணம் கொண்ட ஒரு நபருக்கு, உள் இட ஒதுக்கீட்டின் தீர்ப்பை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து கலைஞர் அவர்களின் பெருங்கனவை சிதைக்கிற நோக்கத்தோடு திகழ்ந்தவருக்கு அம்பேத்கர் விருதை வழங்குவதை தாங்கள் பரிசீலனை செய்ய வேண்டுமெனவும், இந்த அறிவிப்பை தாங்கள் திரும்ப பெற வேண்டும் என்பதை பரிசீலனை செய்ய வேண்டும் என கனிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்,
தொடர்ந்து அருந்ததியர் சமூகத்தின் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக தனது எழுத்துகளில் உள்ள சுயசாதி பற்றுள்ள இவருக்கு எப்படி அம்பேத்கர் விருது சரியாகும், இவரைப்போல சுயசாதி பற்றோடு உள்ள நபருக்கு வழங்குவதிற்கு மாற்றாக அம்பேத்கரியத்தை முழுவதுமாக ஏற்று தமிழ்நாட்டில் உள்ள எழுத்தாளுமைகளுக்கு அம்பேத்கர் விருதை வழங்குவதே உயரிய சிந்தனையாக கருதுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.