சென்னைவாசிகளே உஷார்..! உங்கள் வாகனம் பத்திரம்... உலா வரும் சைக்கிள் திருடன்..!
Top Tamil News January 09, 2025 01:48 PM

சென்னையில் வாகனம் வைத்திருப்போர் அதனைக் கவனமாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்வது நல்லது. ஏனெனில் திருடர்கள் எந்த வண்டியையும் திருடிவிடுகிறார்கள். மோட்டார் சைக்கிள், கார், ஆட்டோ, ஸ்கூட்டர், சைக்கிள் என எந்த வண்டியையும் விட்டு வைப்பதில்லை.

அதேநேரம் சில திருடர்கள் இந்த வாகனங்களை மட்டுமே திருட வேண்டும் என்று பாலிசியுடன் திருடுகிறார்கள். உதாரணமாகப் பைக்கை மட்டும் குறிவைத்து திருடுவது, டிவிஎஸ் எக்எல் பைக்கை மட்டும் திருடுவது, ஸ்கூட்டர்களை மட்டும் திருடுவது, ஆட்டோக்களைக் குறிவைத்து திருடுவது போன்ற பாலிசியுடன் இருக்கிறார்கள்.

குறிப்பிட்ட வாகனத்தை மட்டுமே ஓட்டத்தெரிந்தவர்கள் அல்லது அந்த வாகனங்களின் ரீசேல் வேல்யூ போன்ற காரணங்களால் திருடுகிறார்கள். அப்படி திருடும் வாகனங்களை என்ஜினை தவிர மற்ற அனைத்தையும் விற்றுவிடுகிறார்கள்.

என்ஜினுடன் கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு மிகக் குறைந்த விலைக்கு விற்றுவிடுகிறார்கள். போலியான ஆர்சிபுக்கை உருவாக்கி இப்படி வாகனங்களை விற்றுவிடுகிறார்கள். இப்படிப்பட்ட கும்பல்களைப் போலீசார் கைதும் செய்திருக்கிறார்கள்.

இந்நிலையில் சென்னையில் சைக்கிளை மட்டுமே திருடும் கும்பல்கள்குறித்த வீடியோ வெளியாகி உள்ளது. சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர், பம்மல் பகுதிகளில் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

அதிகாலையில் வாக்கிங் வருவது போல் வந்து நோட்டமிடும் திருடர்கள், வீட்டின் வாசலிலும், அடுக்குமாடிக் குடியிருப்பின் வாகன நிறுத்துமிடங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சைக்கிள்களைத் தூக்கி சென்றுவிடுகிறார்கள்.

அண்மையில் அனகாபுத்தூர் காமாட்சி நகர் 5-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மர்ம நபர் ஒருவர் அப்படி நுழைந்துள்ளார். அவர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை எந்தப் பயமுமின்றி சர்வ சாதாரணமாக வந்து திருடிச் சென்றார்.

இந்தக் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் திருடன் புகுந்து சைக்கிளைத் தூக்கி சென்றிருப்பது குடியிருப்புவாசிகள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே அடுக்குமாடி குடியிருப்பின் அருகே உள்ள வீட்டிலும் கடந்த வாரம் சைக்கிள் திருட்டு போயிருக்கிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அதிகாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. தொடர் சைக்கிள் திருட்டு சம்பவங்கள்குறித்து பம்மல் சங்கர்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.