அண்ணாமலைக்கு அரசியல் தெரியாது- அமைச்சர் சேகர்பாபு
Top Tamil News January 10, 2025 10:48 PM

சென்னை பூங்கா நகரில் உள்ள கந்தக்கோட்டம் முத்துகுமார சுவாமி திருக்கோயிலில் இருந்து தமிழ்நாடு திருக்கோயில்கள் மற்றும் உபயதாரர்கள் சார்பில் சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு 2-ஆம் கட்டமாக 5 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை அனுப்பி வைக்கும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் உடன் இருந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “41 நாட்கள் விரதம் இருந்தும், மகரதீபத்திற்கும் என பல லட்ச மக்கள் ஐயப்பனை தரிசிக்க செல்கின்றனர், குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் மலர் பூஜை நடத்தி, அதை தொடர்ந்து 40 ஆண்டுகள் சபரிமலை யாத்திரை சென்றவர்களுக்கு ஐயப்பன் உருவம் பதித்த வெள்ளி டாலரும் வழங்கபட்டு வருகிறது. தமிழ்நாட்டிலிருந்து செல்கின்ற பக்தர்களுக்கு உதவுவதற்காக கன்னியாகுமரி தேவசானத்திலிருந்து இரு அதிகாரிகள் 62 நாட்கள் சபரிமலையில் இருந்து தேவையான அனைத்து உதவிகளை செய்து வருகிறார்கள். கடந்த ஆண்டு 10 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை வழங்கினோம் அதேபோல் இந்த ஆண்டு கடும் குளிர் காலத்திலும் காவலர்களுக்கு உதவி தேவை என்கின்ற வகையில் தண்ணீர் சூடாக இருப்பதற்கு மில்டன் கம்பெனியைச் சேர்ந்த 2000 ப்ளாஸ்டர்கள் சபரிமலைக்கு தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் வழங்கபட்டுள்ளது. தற்போது இந்த மகரவிளக்கு காலத்துக்கு ஐந்து லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை இந்து சமய அறநிலைத்துறை சார்பில் அனுப்பி வைக்கபட்டுள்ளது.முடிந்த அளவிற்கு உதவிட வேண்டும் என்கின்ற நோக்கத்திற்காக இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறறோம்.

அண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசியலை பற்றி எதுவுமே தெரியாது. அவரை எப்போது தன்னை சாட்டையால் அடித்துக் கொண்டாரோ, அப்போதே அவர் அரசியல் ஞானசூனியத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கபட்டது. பெரியாரை யாரெல்லாம் இழிவு படுத்துகின்றார்களோ அவர்கள் அனைவரும் தமிழக அரசியலுக்கு எடுபடமாட்டார்கள், தமிழகத்தின் விடிவெள்ளி பகுத்தறிவை விதை வைத்து வெளிச்சத்தை உருவாக்கி தந்தவர் தந்தை பெரியார், அவரை பற்றி அறியாதவர்கள் கூறும் கருத்தை நாம் ஒரு கருத்தாகவே பொருட்படுத்த தேவையில்லை” எனக் கூறினார்.


...

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.