கேம் சேஞ்சரை வச்சி செய்யும் ஆந்திர ரசிகர்கள்!.. 500 கோடி பட்ஜெட்டுக்கு ஆப்புதானா?!..
CineReporters Tamil January 11, 2025 02:48 AM

Game Changer: ஷங்கரின் இயக்கத்தில் ராம்சரண் நடித்துள்ள திரைப்படம்தான் கேம் சேஞ்சர். ஆந்திராவில் அதிக பட்ஜெட்டுகளில் பிரம்மாண்ட திரைப்படங்களை தயாரித்து வரும் தில் ராஜு இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் ராம் சரண் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். மேலும், அவருக்கு ஜோடியாக அஞ்சலி, கியாரா அத்வானி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

அதோடு, எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். இந்த படத்தை இயக்க துவங்கிய போதே இந்தியன் 2-வையும் இயக்கும் நெருக்கடி ஷங்கருக்கு ஏற்பட்டதால் ஒரே நேரத்தில் இரண்டு படங்களையும் இயக்கி வந்தார். இந்தியன் 2 படம் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.


கேம் சேஞ்சர்: எனவே, கேம் சேஞ்சரின் வெற்றியை ஷங்கர் நம்பியிருக்கிறார். இந்த நிலையில்தான் கேம் சேஞ்சர் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தெலுங்கில் உருவானாலும் இந்த படம் தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளில் டப் செய்யப்பட்டிருக்கிறது. எனவே, தமிழகத்திலும் இப்படம் கணிசமான தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.

கேம் சேஞ்சர் விமர்சனம்: தமிழகத்தில் காலை 9 மணிக்கு முதல் காட்சி என்றாலும், ஆந்திராவில் அதிகாலை 4 மணிக்கு இப்படம் திரையிடப்பட்டது. இந்த படத்தில் வரும் 20 நிமிட பிளாஷ்பேக் காட்சி, ராம் சரணின் நடிப்பு மற்றும் தமனின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஆகியவை சிறப்பாக இருக்கிறது. மற்றபடி இது ஷங்கரின் கம்பேக் படம் இல்லை என்றே பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார்கள்.

இது வழக்கமான தெலுங்கு மசாலா படம் போலவே இருக்கிறது. இது போன்ற அரசியல் படங்களை நிறைய பார்த்துவிட்டோம் என்று பலரும் பதிவிட்டார்கள். எனவே, இந்த படத்தின் ரிசல்ட் என்னவாகும் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். இதற்கிடையில், ஜூனியர் என்.டி.ஆர், மகேஷ்பாபு மற்றும் அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் கேம் சேஞ்சர் படத்திற்கு எதிராக எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.


டிவிட்டரில் டிரெண்டிங்: DisasterGameChanger மற்றும் GameOver போன்ற ஹேஷ்டேக்குகளை பதிவிட்டு கேம் சேஞ்சர் படம் பற்றி நக்கலடித்து எக்ஸ் தளத்தில் டிரெண்டிங் செய்து வருகிறார்கள். சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த ஹேஷ்டேக்கை பதிவிட்டிருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கு எதிராக களம் இறங்கியுள்ள ராம் சரண் ரசிகர்கள் BlockbusterGameChanger என்கிற ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்து வருகிறார்கள்.

தமிழில்தான் விஜய் ரசிகர்கள் அஜித், ரஜினி, சூர்யா ஆகியோரின் படங்கள் வந்தால் இப்படி எக்ஸ் தளத்தில் ஹேஷ்டேக் போட்டு டிரெண்டிங் செய்வார்கள். இப்போது இது ஆந்திராவிலும் பரவி விட்டது. மகேஷ்பாபு, அல்லு அர்ஜூன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்களுக்கு ராம் சரண் மீது என்ன கோபம் என்பது தெரியவில்லை.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.