சென்னையில் 2 நாட்கள் மதுக்கடை மூடல் - காரணம் என்ன?
Seithipunal Tamil January 11, 2025 05:48 AM

சென்னையில், திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு இரண்டு நாட்கள் மதுக்கடைகள் மூடப்படுவதாக சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது:-

"15.01.2025 அன்று திருவள்ளுவர் தினம் மற்றும் 26.01.2025 அன்று குடியரசு தினம் உள்ளிட்ட இரண்டு நாட்களில் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபானம் விதிகள் 1981 விதி 2511(a) உள்ளிட்டவைகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள்,FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் FL3(A), FL3(AA) மற்றும் FL11 உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இரு தினங்களிலும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.