தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டதும் மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வரும் என அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.
இந்த ஆண்டின் முதல் தமிழக சட்டசபை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று சட்டசபை 5வது நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்றபோது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
இந்நிலையில், மாதாந்திர மின் கணக்கீடு தொடர்பாக , சட்டப்பேரவையில் கேட்ட கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தார்.அப்போது அவர், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டதும் மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வரும் என்றார்.தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டதும் மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வரும் என அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.
இந்தியா முழுவதும் மின்சார வாரியங்களின் தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்புகளைக் குறைக்கும் வகையிலும், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் மின்சாரப் பயன்பாட்டைத் துல்லியமாகக் கணக்கிடும் வகையிலும் அனைத்து மின் இணைப்புகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்துவதை கட்டாயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
அதன்படி, 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் கணிசமான எண்ணிக்கையிலான மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது.
அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 3 கோடி இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படவுள்ளன.இந்நிலையில், மாதாந்திர மின் கணக்கீடு தொடர்பாக , சட்டப்பேரவையில் கேட்ட கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தார்.அப்போது பதிலளித்த அவர், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டதும் மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வரும் என்று கூறினார் .