பொங்கல் பண்டிகை எதிரொலி: சென்னை-மதுரை இடையே முன்பதிவில்லா ரெயில் இயக்கம்.!
Seithipunal Tamil January 11, 2025 05:48 AM

வரும் செவ்வாய்க்கிழமை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக வெளியூர்களில் உள்ளவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்புவார்கள். இந்த நிலையில், இன்று வார இறுதி நாள் என்பதால் வெளியூர்களில் பணிபுரியும் மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு இன்றில் இருந்தே படையெடுக்க தொடங்கி விட்டனர்.

இதனால், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் விதமாக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், சென்னையில் இருந்து நாளை மதுரைக்கு முன்பதிவில்லா சிறப்பு மெமு ரெயில் நாளைக்கு இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

முழுவதும் முன்பதிவில்லாத பெட்டிகளை கொண்ட இந்த மெமு ரெயிலானது, சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து நாளை காலை 10.45 மணிக்கு புறப்பட்டு, மதுரைக்கு இரவு 7.15 மணிக்கு செல்லும். மறுமார்க்கமாக மதுரையில் இருந்து நாளை இரவு 8.30 மணிக்கு புறப்படும் இந்த ரெயிலானது, நாளை மறுநாள் அதிகாலை 4.40 சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் வந்தடையும்.

இந்த ரெயில், மேல்மருவத்தூர், திண்டிவனம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், கொடை ரோடு உள்ளிட்ட ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.