கோவிலுக்கு வந்த சிறுமியிடம் எல்லைமீறல்.. போலீஸ் எஸ்.ஐ.ஐ போக்சோவில் கைது!
Dinamaalai January 12, 2025 01:48 AM

ஜெயபாண்டி மதுரை மாவட்ட குற்றப்பிரிவில் சிறப்பு எஸ்.ஐ.ஐயாகப் பணிபுரிந்து வந்தார். கடந்த மாதம் 13 ஆம் தேதி (13.12.2024) திருப்பரங்குன்றம் மலையில் திருக்கார்த்திகை தீபத்திற்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அங்கே வழிபட வந்த 14 வயது சிறுமியை ஜெயபாண்டியன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரியவந்துள்ளது. 

 சிறுமி கழிப்பறைக்குச் சென்றபோது, சிறுமியைப் பின்தொடர்ந்து சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். அதிர்ச்சியடைந்த சிறுமி அழுது கொண்டே அங்கிருந்து சென்றுவிட்டார். இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். மேலும், குழந்தைகள் நல மையத்திற்கும் (சிறுவர் உதவி மையம்) தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, குழந்தைகள் நல மைய ஊழியர்கள் இது தொடர்பாக திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து, காவல்துறை விசாரணையில் சிறுமி அளித்த புகார் உண்மை என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட போலீஸ்  எஸ்.ஐ.ஐ ஜெயபாண்டியனை திருப்பரங்குன்றம் காவல் துறையினர் போக்சோ சட்டம் பிரிவு 4-ன் கீழ் கைது செய்துள்ளனர். பின்னர், ஜெயபாண்டியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மதுரையில் 14 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக போலீஸ்  எஸ்.ஐ.ஐ கைது செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.