தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வேட்டையன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கூலி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் கூலி படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள சென்னை ஏர்போர்ட்டுக்கு சமீபத்தில் சென்றார். அப்போது அவர் அரசியல் சம்பந்தமான கேள்விகளை என்னிடம் கேட்க வேண்டாம் என நான் பலமுறை கூறிவிட்டேன் எனவே அந்த கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள் என்றார்.
அதாவது சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பியபோது அரசியல் வேண்டாம் என்றார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதை தற்போது நடிகர் மன்சூர் அலிகான் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, திரைப்படங்களில் நடிகர் ரஜினிகாந்த் தன்னை இராவணனின் ரசிகர் என்று காட்டிக் கொள்கிறார். ஆனால் நிஜத்தில் அவர் ஒரு பயந்தாங்கொள்ளி. மேலும் அண்ணா யுனிவர்சிட்டி விவகாரத்தில் ரஜினி நோ என்று பதில் அளித்துள்ளார். இதன் மூலம் அவர் நிஜத்தில் எவ்வளவு பெரிய பயந்தாங்கொள்ளி என்பது தெரிகிறது என்று கூறினார்.