OMG: நெடுஞ்சாலையில் விழுந்த விமானம்… சுக்கு நூறாக உடைந்து தீப்பற்றி எரிந்ததில் 3 பேர் உயிரிழப்பு..!!
SeithiSolai Tamil January 12, 2025 06:48 AM

கென்யா கிழக்கு ஆப்பிரிக்காவின் அமைந்துள்ளது. இந்த நாட்டின் மலிண்டி என்ற மாகாணத்தில் நேற்று சிறிய ரக விமானம் ஒன்று பறந்து சென்றது. இதில் 3 பேர் பயணம் செய்தனர். இந்த விமானம் மலிண்டி விமான நிலையம் அருகே வந்த போது திடீரென விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் நெடுஞ்சாலையில் விழுந்து தீ பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். அதேபோன்று விமானத்தில் பயணம் செய்த 3 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் படுகாயம் அடைந்தவர்களின் மீது அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.