பொதுவாக hdl என்ற நல்ல கொலஸ்ட்ராலை நாம் சிலவகை உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சி மூலம் அதிகபடுத்தலாம் .அது பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.வெங்காயம் சாப்பிடுவது நமக்கு 25 சதவீதம் hdl கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும் ,சோயாபீன்ஸ் சாப்பிடுவது மூக்கடலை, வெள்ளை மூக்கடலை, ராஜ்மா போன்ற...உணவுகளையும் சேர்த்து வந்தால் நல்ல கொலஸ்ட்ராலை அதிகமாக்கலாம்
2.சிலவகை உடற்பயிற்சிகள் ,தியானம் ,மனதை சந்தோஷமாக வைத்து கொள்வது போன்றவைகளால் hdl கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தி ஆரோக்யமாய் வாழலாம்
3. விலங்குகளின் கல்லீரல், டுனா மற்றும் சால்மன், காளான்கள், உருளைக்கிழங்கு போன்ற உணவு வகைகளில் நல்ல கொலஸ்ட்ரால் சத்து உள்ளது.
4.தினசரி 20-30 நிமிட நடைப்பயணத்துடன் தொடங்குங்கள், பின்னர் படிப்படியாக ஜாகிங் மற்றும் பிற தீவிர கார்டியோ பயிற்சிகள் வரை செய்ய ஆரம்பித்தல் நல்ல கொலட்ராலை அதிகப்படுத்தும்
5.பாதாம், பிஸ்தா, வேர்க்கடலை , முந்திரி, போன்ற நட்ஸ் வகைகள் சாப்பிடுவதன் மூலம் ஹெச்டிஎல் கொழுப்பின் அளவை அதிகரிக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
6. அதிக எடை அல்லது உடல் பருமனாக இருந்தால் தானாகவே இதய நோய்கள் அதிகளவில் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே உடல் கொழுப்பை 3 சதவிகிதம் குறைப்பது ஹெச்டிஎல் அளவுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன