என்னால் அந்த டைம்ல வலி தாங்க முடியல.. மிஷ்கினிடம் போய் விஷயத்தை சொன்னேன்… அவர் புரிஞ்சிக்கிட்டு… நடிகை நித்யா மேனன் ஓபன் டாக்..!!
SeithiSolai Tamil January 12, 2025 11:48 AM

தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபலமாக இருப்பவர் நடிகை நித்யா மேனன். இவர் தமிழில் மணிரத்தினம் இயக்கிய ஓ காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் தனுசு உடன் இணைந்து திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் நடித்து தேசிய விருது பெற்றது. தற்போது ஜெயம் ரவி நடித்துள்ள காதலிக்க நேரமில்லை என்ற படத்திலும், இட்லி கடை என்ற படத்தில் நடித்துள்ளார்.

காதலிக்க நேரமில்லை என்ற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் பல்வேறு கருத்துக்களை பேசி வருகிறார். அப்போது இயக்குனர் மிஷ்கின் குறித்து அவர் கூறியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சைக்கோ என்ற திரைப்படத்தில் நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை குறித்து அவர் கூறியுள்ளார்.

சினிமாவில் பொதுவாக ஒரு மனிதநேயமற்ற தன்மை உள்ளது. உங்களுக்கு என்னதான் உடல்நிலை சரியில்லை என்றாலும் நீங்கள் சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து நடித்த கொடுத்துவிட்டு தான் போக வேண்டும். அதற்கு நாங்களும் பழகி விடுகிறோம். சைக்கோ படப்பிடிப்பின் போது எனக்கு உதயநிதியுடன் முதல் நாள் ஷாட் இருந்தது. அன்று எனக்கு பீரியட்ஸ் முதல் நாள் என்பதால் வலி அதிகமாக இருந்தது.

நான் படப்பிடிப்பிற்கு தாமதமாக தான் வந்தேன் போனதும் நான் மிஷினிடம் சென்று பீரியட்ஸ் என்று கூறினேன். நான் பீரியட்ஸ் சென்று கூறிய முதல் ஆண் இயக்குனர் மிஸ்கின் தான். நான் சொன்னதும் அவர் உடனே முதல் நாளா சரி நீ எதுவும் பண்ண வேண்டாம் போய் ரெஸ்ட் எடு என்று சொல்லிவிட்டார். ஒரு இயக்குனர் நம்மை புரிந்து கொண்டு அப்படி சொல்வது எவ்வளவு ஆர்வமாக இருக்கும் தெரியுமா. மிஸ்கின் தனது கலையை ரொம்ப தீவிரமாக நேசிப்பவர் அதற்கான மரியாதையையும் அவர் கொடுப்பவர் என நித்யா மேனன் தெரிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.