“முழுசா ரெண்டு வாரம் கூட முடியல” கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை!
Dinamaalai January 12, 2025 03:48 PM

கன்னியாகுமரி மாவட்டத்தில், கடல் நடுவே புதிதாக கட்டப்பட்டிருக்கும் கண்ணாடி பாலத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு 3 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கண்ணாடி பாலத்தின் கைப்பிடி பழுதானதால் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் நினைவுப் பாறையையும் இணைக்கும் வகையில் ரூ.37 கோடி செலவில் கண்ணாடி கூண்டுப் பாலம் கட்டப்பட்டு, திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாக் கொண்டாட்டத்தினை முன்னிட்டு திறக்கப்பட்டது. கடலுக்கு மேலே மிதந்து செல்லும் வகையிலான தோற்றத்தைக் கொடுக்கும் இந்தக் கண்ணாடி இழைக் கூண்டுப் பாலம் திறக்கப்பட்டதிலிருந்து இதில் நடந்து செல்ல சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், கடல் நடுவே அமைந்துள்ள கண்ணாடி கூண்டு இழைபாலத்தில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், 3 நாட்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.