நடிகை ராஷ்மிகா மந்தானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காலில் கட்டு போட்டுள்ள போட்டோவை பகிர்ந்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், "இந்த புத்தாண்டு எனக்கு இனிய புத்தாண்டு என்று நினைக்கிறேன். என்னுடைய புனித இடமான ஜிம்மில் எனக்கு காலில் அடிப்பட்டுவிட்டது.
இப்போது நான் 'ஹாப் மோடில்' (குதித்து குதித்து செல்லும் மோட்) உள்ளேன். இது அடுத்த சில வாரங்களுக்கா அல்லது மாதங்களுக்கா அல்லது எத்தனை நாட்களுக்கு என்று கடவுளுக்கு தான் தெரியும். தாமா, சிக்கந்தர் மற்றும் குபேரா பட செட்டுகளுக்கு இப்படி குதித்து குதித்து தான் செல்லப்போகிறேன் என்று நினைக்கிறேன்.
இந்த தாமதத்திற்காக என்னுடைய இயக்குநர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய கால்கள் ஓரளவு சரியானதும் குறைந்துபட்சம் குதித்து குதித்தாவது நடக்கும் அளவுக்கு சரியானதும் படப்பிடிப்பிற்கு வந்துவிடுகிறேன்.
ஒருவேளை உங்களுக்கு நான் இப்போது தேவைப்பட்டால், படப்படிப்பின் ஒரு ஓரத்தில் முயல் போன்ற உயர்தர குதிக்கும் வர்க் அவுட்டை செய்துகொண்டிருப்பேன். ஹாப்...ஹாப்...ஹாப்" என்று பதிவிட்டுள்ளார்.