Rashmika Mandana: கர்நாடகாவில் பிறந்து வளர்ந்தாலும் தெலுங்கு திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர்தான் ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் படம் மூலம் தமிழ்நாட்டு ரசிகர்களிடமும் பிரபலமானார். விஜய தேவரகொண்டாவுடன் சில படங்களில் நடித்துவிட்டு தெலுங்கில் உள்ள மகேஷ் பாபு உள்ளிட்ட பல நடிகர்களுடனும் நடித்தார்.
தமிழில் சுல்தான் படத்தில் அறிமுகமான ராஷ்மிகா விஜயுடன் வாரிசு படத்திலும் நடித்திருந்தார். இவர் ஒரு தீவிர விஜய் ரசிகை. கில்லி படம் பார்த்துவிட்டு தான் விஜய் ரசிகையாக மாறியதாக சொல்லியிருந்தார். நடிப்பு மட்டுமல்ல. நடனமும் நன்றாக ஆடுவார். அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா படத்தில் நடித்து நேஷனல் கிரஸ்ஸாக மாறினார்.
அந்த படம் ஹிந்தியிலும் ஹிட் அடிக்கவே அனிமல் உள்ளிட்ட சில ஹிந்தி படங்களில் நடித்தார். அதுவும் அனிமல் படத்தில் ரன்வீர் கபூரோடு முத்தக்காட்சிகளிலும் புகுந்து விளையாடியிருந்தார். இந்த படம் ஹிட் அடித்ததால் ஹிந்தியில் அவருக்கு தொடர் வாய்ப்புகள் வருகிறது. ஏ.ஆர்.முருதகாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடித்து வரும் சிக்கந்தர் படத்திலும் இவர்தான் கதாநாயகி.
அதோடு, சில நாட்களுக்கு முன்பு வெளியான புஷ்பா 2 படம் 1500 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை செய்துவிட்டது. எனவே, இந்திய சினிமாவின் முக்கிய நடிகையாக ராஷ்மிகா மாறிவிட்டார். இப்போது சிக்கந்தர், குபேரா, தமா ஆகிய 3 படங்களில் ராஷ்மிகா நடித்து வந்தார். இந்நிலையில்தான், ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் போது அவருக்கு காயம் ஏற்பட்டிருப்பதால் அவர் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டிருப்பதாக நேற்று செய்திகள் வெளிவந்தது.
அதை நிரூபிக்கும் வகையில் காலில் கட்டுடன் அமர்ந்திருக்கும் புகைப்படங்களை ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். மேலும் ‘இதுதான் எனக்கு ஹேப்பி நியூ இயர் என நினைக்கிறேன். இன்னும் சில வாரங்களோ, மாதங்களோ இதுதான் என் நிலைமை. கடவுளுக்குதான் தெரியும். சீக்கிரம் படப்பிடிப்புக்கு திரும்புவேன் என நம்புகிறேன்.