பொங்கல் தினத்தையொட்டி இன்று வெளியாகி உள்ள படம் மதகஜராஜா. ரசிகர்கள் பெரும் ஆர்வத்தோடு திரைக்கு வந்து வாய்விட்டுச் சிரிக்கலாம். அப்படிப்பட்ட கலகலப்பான படம்தான் இது. இதைப் பற்றி மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா...
4 மறைந்த நடிகர்கள்: விஷால், சந்தானம், ஆர்யா, நிதின் சத்யா, சடகோபன் ரமேஷ், லொள்ளு சபா சுவாமிநாதன், அஞ்சலி, வரலட்சுமி, மணிவண்ணன், மனோபாலா, சிட்டிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். மறைந்த நடிகர்கள் நாலு பேர் நடித்துள்ளனர்.
கதை: ஒரு வாத்தியார் தனக்கு வேண்டப்பட்ட மாணவர்கள் தன் வீட்டு மகள் கல்யாணத்துக்கு ஊருக்குக் கூப்பிடுகிறார். விஷால், சந்தானம், நிதின் சத்யா, சடகோபன் ரமேஷ் உள்பட பலர் வருகின்றனர். அப்போது விருப்பமில்லாத கல்யாணத்தை விஷால் சரி பண்ணுகிறார்.
அப்போது நண்பனுக்காக விட்டுக் கொடுக்கிறார். ஆறடி உயரத்துடன் ஸ்மார்ட்டா இருக்கிறார். சந்தானம் அவ்வப்போது கமெண்ட் அடிக்கிறார். சடகோபன் ரமேஷ் ஒரு பிரச்சனையில் சிக்குகிறார். அதற்குக் காரணம் டெல்லிக்கே படியளக்குற பெரிய ஆள். சோனுசூட்தான் படத்தில் வில்லன். இந்தக் கதையில் விஷால் ஜெயிக்கிறாரா இல்லையாங்கறதுதான் கதை.
சுந்தர்.சி.யின் வழக்கமான பார்முலா படி கலகலப்பாக காமெடியுடன் கதை செல்கிறது. இந்தப் படத்தைப் பார்க்கும் போது மூளையை கழட்டி வச்சிருங்க. எந்த விதத்தில் எதுவுமே கனெக்ட் ஆகாது. இந்தப் படத்தை முழுக்க முழுக்கக் காப்பாற்றுபவர் சந்தானம்தான்.
அவருடைய கவுண்டர் ஜோக், காமெடிக்கும் தியேட்டரே அதிர்கிறது. படத்துல கில்மாவுக்கு வரலட்சுமி, அஞ்சலி போட்டி போட்டு ஓவர் கிளாமராக நடித்துள்ளனர். யோகா சொல்லித் தரும் வரலட்சுமியைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிக்கலாம்.
சந்தானம் காமெடி: சடகோபன் ரமேஷ் நல்ல கிரிக்கெட் பிளேயர். ஜூனியர் ஆர்டிஸ்டாக வருகிறார். விஜய் ஆண்டனி பிரமாதமாக இசை அமைத்துள்ளார். சந்தானத்துக்காக படம் பார்க்கலாம். தமிழ்சினிமாவில் சிரிப்புக்கு அவ்வளவு பஞ்சம் இருக்கு. காமெடி நடிகர்களே கிடையாது. திரும்பவும் சந்தானம் காமெடிக்கு வரலாம்.
ஹீரோவுக்கு இணையாக வந்தால் போதும். இந்தப் படத்தின் ரியல் ஹீரோ சந்தானம்தான். ஒரு ஆயாவுக்கு நல்ல மேக்கப் போட்டு ஏமாத்துற கதைதான். 2 மணி நேரமும் சந்தானம் வர்ற காட்சி தான் சூப்பர். மனோபாலா காமெடியைப் பார்த்தால் கலகலப்பு ஞாபகம் வரும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
விஷால் ஃபீலிங்: 12 வருஷம் கழிச்சி 12ம் தேதி மதகஜராஜா ரிலீஸ் ஆகி இருக்கு. ஆனா 12 வருஷத்துக்கு முன்னாடி உள்ள படம் மாதிரி தெரியல. புது படம் மாதிரி இருக்கு. என் உடல்நிலைக்காக பிரார்த்தனை பண்ணின நண்பர்கள் எல்லாருக்கும் நன்றி என்று விஷால் தெரிவித்துள்ளார்.