விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியாளர்களாக 8 பேர் வீட்டில் இருந்தனர். அவர்களை சேலஞ்ச் செய்யும் விதமாக ஏற்கனவே வெளியில் அனுப்பப்பட்ட 8 போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் வந்தனர். இதனால் ஆட்டம் சூடு பிடித்திருந்த நிலையில் நேற்று சனிக்கிழமை அருண் Evict செய்யப்பட்டு வீட்டில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில் இன்று ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சியில் தீபக் எவிக்ட் செய்யப்பட்டு வீட்டை விட்டு வெளியேற இருக்கிறார். இது கண்டிப்பாக வெற்றி கோப்பையை பெறுவார் என்று நினைத்த தீபக் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. PR-களின் ஆதிக்கம் தான் தீபக் வெளியேற காரணம் என்று கூறப்படுகிறது.