பஞ்சாங்கம் ஜன.12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
Dhinasari Tamil January 12, 2025 09:48 PM

#featured_image %name%

astrology panchangam rasipalan dhinasari 3 இன்றைய பஞ்சாங்கம்: ஜன.12

ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம

||श्री:|| 

!!श्रीरामजयम!! ஸ்ரீராமஜெயம்

!!ஸ்ரீ:!!

श्री:
श्रीमते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

மார்கழி ~ 28 (12 1.2025 ) ஞாயிற்றுக் கிழமை*
வருடம் ~ க்ரோதி வருஷம் {க்ரோதி நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ தக்ஷிணாயனம்
ருது ~ ஹேமந்த* ருது.
மாதம்~ மார்கழி மாஸம் { *தனுர் மாஸம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ 6.39 am வரை திரயோதசி பின் சதுர்த்தசி
நாள் ~ பானு வாஸரம் (ஞாயிற்றுக்கிழமை)
நட்சத்திரம் ~ 11 .52 am வரை மிருகசீரிஷம் பின் திருவாதிரை
யோகம் ~ ப்ராம்யம்
கரணம் ~ தைதுளை
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்.
ராகு காலம்~ மாலை 4.30~ 6.00.
எமகண்டம் ~ மதியம் 12.00 ~ 1.30.
குளிகை ~ மாலை 3.00 ~ 4.30.
நல்லநேரம் * ~. 9.00 to 10.30 am 3.00 to 4.30pm
சூரிய உதயம் ~. காலை 6.38
சந்திராஷ்டமம் ~ விருச்சிகம்
சூலம் ~ மேற்கு.
பரிகாரம் ~ வெல்லம்.
ஸ்ரார்த்ததிதி ~ சதுர்த்தசி
இன்று ~

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.

!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः । गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!

ஞாயிற்றுக்கிழமை ஹோரை

காலை

6-7. சூரியன். அசுபம்.
7-8. சுக்கிரன். சுபம்
8-9.. புதன். சுபம்
9-10.. சந்திரன். சுபம்
10-11. சனி.. அசுபம்
11-12. குரு. சுபம்

பிற்பகல்

12- 1. செவ்வா. அசுபம்
1-2. சூரியன். அசுபம்
2-3. சுக்கிரன். சுபம்
3-4. புதன். சுபம்

மாலை

4-5. சந்திரன்.சுபம்
5-6 சனி.. அசுபம்
6-7 குரு. சுபம்

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

இன்றைய (12-1-2025) ராசி பலன்கள் மேஷம்

மேஷ ராசிக்கான பலன்கள் ..!

தன்னம்பிக்கையுடன் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். அதிகார பதவிகளில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். விளையாட்டு விஷயத்தில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றியமைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அஸ்வினி : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
பரணி : ஆதரவான நாள்.
கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்கான பலன்கள் ..!

வியாபார பணிகளில் நெருக்கடிகள் குறையும். உங்கள் கருத்துக்களுக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் பிறக்கும். மனதில் நேர்மறை சிந்தனைகள் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் மாற்றங்கள் உருவாகும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். பரிசு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

கிருத்திகை : நெருக்கடிகள் குறையும்.
ரோகிணி : ஒற்றுமை அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : அறிமுகங்கள் கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்கான பலன்கள் ..!

குணநலன்களில் சில மாற்றம் காணப்படும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் தூக்கமின்மையும், சோர்வும் ஏற்படும். அதிகாரப் பொறுப்பில் இருப்பவர்கள் பேச்சுக்களில் கவனம் வேண்டும். புதிய தொழில் நுட்ப கருவிகள் மீதான ஆர்வம் மேம்படும். சகோதர உறவுகளிடம் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவுகள் பிறக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : தூக்கமின்மையான நாள்.
திருவாதிரை : ஆர்வம் மேம்படும்.
புனர்பூசம் : தெளிவுகள் பிறக்கும்.

கடகம்

கடக ராசிக்கான பலன்கள் ..!

குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் நெருக்கடியான சூழ்நிலைகள் இருந்தாலும் ஒத்துழைப்பு ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ரகசியமான செயல்பாடுகள் அதிகரிக்கும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். சிரமம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : ஆசைகள் நிறைவேறும்.
பூசம் : ஒத்துழைப்பான நாள்.
ஆயில்யம் : கருத்துக்களில் கவனம்.

சிம்மம்

சிம்ம ராசிக்கான பலன்கள் ..!

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். எதிர்காலம் தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். வியாபாரப் பணிகளில் புதிய முதலீடுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்கள் வருகையால் அலைச்சலும் விரயங்களும் உண்டாகும். புதிய துறை சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : புத்துணர்ச்சி உண்டாகும்.
பூரம் : முதலீடுகள் அதிகரிக்கும்.
உத்திரம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசிக்கான பலன்கள் ..!

குடும்பத்தில் அமைதி உண்டாகும். பாதியில் நின்ற பணிகளைச் செய்து முடிப்பீர்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். எதிர்பாராத சில அனுபவங்கள் மூலம் புதிய பாதை புலப்படும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் ஆதாயம் ஏற்படும். பக்தி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு நிறம்

உத்திரம் : அமைதி உண்டாகும்.
அஸ்தம் : அறிமுகங்கள் கிடைக்கும்.
சித்திரை : ஆதாயகரமான நாள்.

துலாம்

துலாம் ராசிக்கான பலன்கள் ..!

உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். மாமன் வழி உறவுகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வெளிநாட்டு தொடர்புகள் மூலம் அலைச்சல் ஏற்படும். கால்நடைகளிடம் கவனம் வேண்டும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உருவாகும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். ஆதரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தனவெள்ளை நிறம்

சித்திரை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
சுவாதி : அலைச்சல் ஏற்படும்.
விசாகம் : மதிப்பளித்துச் செயல்படவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கான பலன்கள் ..!

குழந்தைகள் தொடர்பான செயல்களில் கவனத்துடன் இருக்கவும். பலதரப்பட்ட சிந்தனைகளால் மனதளவில் குழப்பம் உண்டாகும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். சமூகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். பொழுதுபோக்கு செயல்களால் கையிருப்புகள் குறையும். கலைப் பணிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் மேம்படும். அமைதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

விசாகம் : குழப்பமான நாள்.
அனுஷம் : விவேகத்துடன் செயல்படவும்.
கேட்டை : அலைச்சல் மேம்படும்.

தனுசு

தனுசு ராசிக்கான பலன்கள் ..!

நண்பர்களின் சந்திப்பு புதிய நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும். ஆரோக்கியம் தொடர்பான சில இன்னல்கள் குறையும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். சாதுரியமான பேச்சுக்கள் மூலம் புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய கல்விகளை கற்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். சோர்வு விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : நம்பிக்கை உண்டாகும்.
பூராடம் : பொறுப்புகள் மேம்படும்.
உத்திராடம் : ஆர்வம் அதிகரிக்கும்.

மகரம்

மகர ராசிக்கான பலன்கள் ..!

விவாதங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களை பொறுமையுடன் கேட்டு முடிவெடுப்பது நல்லது. ஆடம்பரப் பொருட்கள் மீதான ஆர்வமும் அதனால் விரயமும் உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். உற்சாகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

உத்திராடம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
திருவோணம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
அவிட்டம் : புரிதல் அதிகரிக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்கான பலன்கள் ..!

மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். குழந்தைகளின் கல்வி குறித்த சிந்தனை அதிகரிக்கும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படுவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத சில மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அவிட்டம் : காரியங்கள் நிறைவேறும்.
சதயம் : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

மீனம்

மீன ராசிக்கான பலன்கள் ..!

குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சிறு மற்றும் குறுந்தொழிலில் ஆதாயம் மேம்படும். வெளியூர் பயணங்கள் மூலம் மதிப்பு அதிகரிக்கும். மாறுபட்ட அணுகுமுறைகள் மூலம் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வீடு மற்றும் மனை சார்ந்த முதலீடுகளில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். நற்செயல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

பூரட்டாதி : புரிதல் உண்டாகும்.
உத்திரட்டாதி : மதிப்பு அதிகரிக்கும்.
ரேவதி : ஆர்வம் ஏற்படும்.

தினம் ஒரு திருக்குறள்

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல். (குறள் 894)

பரிமேலழகர் உரை:
ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல் – மூவகை ஆற்றலும்உடையார்க்கு அவை இல்லாதார் தாம் முற்பட்டு இன்னாதவற்றைச் செய்தல்; கூற்றத்தைக் கையால் விளித்தற்று – தானேயும் வரற்பாலனாய கூற்றுவனை அதற்கு முன்னே கைகாட்டி அழைத்தால ஒக்கும். (கையால் விளித்தல் -இகழ்ச்சிக் குறிப்பிற்று. தாமேயும் உயிர்முதலியகோடற்கு உரியாரை அதற்குமுன்னே விரைந்து தம்மேல் வருவித்துக்கொள்வார் இறப்பினது உண்மையும் அண்மையும் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் வேந்தரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:
வலியுடையார்க்கு வலியில்லாதார் இன்னாதவற்றைச் செய்தல், தம்மைக் கொல்லும் கூற்றத்தைக் கைகாட்டி அழைத்தாற் போலும்.

மு.வரதராசனார் உரை:
ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.

தினம் ஒரு திருமுறை

மறை – 2 | பதிகம் – 64 | பாடல் – 8

வாசங் கமழும் பொழில்சூ ழிலங்கை வாழ்வேந்தை
நாசஞ் செய்த நங்கள் பெருமா னமர்கோயில்
பூசைசெய்து வடியார் நின்று புகழ்ந்தேத்த
மூசி வண்டு பாடுஞ் சோலை முதுகுன்றே

விளக்கவுரை

மணம் கமழும் பொழில் சூழ்ந்த இலங்கை வாழ் வேந்தனாகிய இராவணனின் வலிமையை அழித்த நம்பெருமான் அமர்கின்ற கோயில், அடியவர் பூசை செய்து நின்று புகழ்ந்து போற்ற விளங்குவதும், வண்டுகள் மொய்த்துப்பாடும் சோலைகளை உடையதுமான முதுகுன்றாகும்

தினம் ஒரு திவ்யப் பிரபந்தம்

மோடியோடி லச்சையாய சாபமெய்தி முக்கணான்
கூடுசேனை மக்களோடு கொண்டுமண்டி வெஞ்சமத்
தோடவாண னாயிரம் கரங்கழித்த வாதிமால்
பீடுகோயில் கூடுநீர ரங்கமென்ற பேரதே.
திருச்சந்த விருத்தம் திருமொழி – 6 (804)

விளக்கம் : காளியும் வெட்கத்தை விளைப்பதான சாபத்தையடைந்த ருத்ரனும் ஸ்வஜனங்களோடு திரண்ட ஸேனையை அழைத்துக்கொண்டு பயங்கரமான போர்க்களத்திலிருந்து வேகமாக ஓடிப்போன வளவிலே பாணாஸுரனது ஆயிரம் கைகளைஅறித்தொழித்த பரம புருஷனுடைய பெருமைதங்கிய கோயில் காவேரியோடு கூடின திருவரங்கமென்னும் திருநாமமுடையதாம்.

News First Appeared in

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.