துபாயில் நடைபெற்ற 24H கார் ரேஸில் நடிகர் அஜித்குமாரின் அணி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித் தேசியக்கொடியுடன் வலம் வந்தார். நடிகர் அஜித்தின் வெற்றிக்கு தற்போது திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறிவரும் நிலையில் தற்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் மற்றும் அவருடைய அணி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
இந்த குறிப்பிடத்தக்க வெற்றிக்காக நடிகர் அஜித் மற்றும் அவருடைய குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிப்பட்ட மதிப்பு மிக்க பந்தய நிகழ்வில் நம்முடைய திராவிட மாடல் அரசின் விளையாட்டுத்துறை லோகோவை காட்சிப்படுத்தியதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் நம்முடைய நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் தொடர்ந்து பெருமை சேர்க்க நடிகர் அஜித்குமார் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.