கடலூர்: வரதட்சணை எங்க? திருமணமான 2 ஆண்டுகளில் பெண் தற்கொலை.. கணவரின் தொந்தரவால் சோகம்.!
Tamilspark Tamil January 13, 2025 07:48 AM

கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி, பூதவராயன்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் முருகேசன். இவரின் மகன் சிவசங்கரன். இவரது மனைவி ஷகீலா (வயது 28). தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து இரண்டரை ஆண்டுகள் மட்டுமே ஆகிறது. அதற்குள் குழந்தை இல்லை என்ற பேச்சு மேலோங்கியதாக தெரியவருகிறது.

மேலும், சிவசங்கரன் தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டும் பிரச்சனை செய்து வந்திருக்கிறார். இதனால் கணவன் - மனைவி இடையே தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது.

பெண்மணி தற்கொலை

கடந்த ஜன.06 அன்று தம்பதியிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, மனமுடைந்துபோன சகிலா, பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை மீட்ட குடும்பத்தினர், புவனகிரி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.

இதையும் படிங்க:

அங்கு சிகிச்சை பெற்று வந்த பெண்மணி, மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து செந்தமிழ்செல்வி புவனகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருமணம் முடிந்து இரண்டரை ஆண்டுகால ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணையும் நடந்து வருகிறது.

இதையும் படிங்க:

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.