அப்படி போடு..! இன்று 2 மாவட்டங்களுக்கு விடுமுறை… காலையிலேயே வெளியான செம குட் நியூஸ்…!!!
SeithiSolai Tamil January 13, 2025 10:48 AM

தமிழகத்தில் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 6 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் விடுமுறை. அதன் பிறகு வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் வேலை நாளாக இருந்த நிலையில் அன்றைய தினமும் விடுமுறை வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்ததால் தமிழக அரசு விடுமுறை அறிவித்தது. இதன் காரணமாக 6 நாட்கள் மொத்தம் விடுமுறை.

இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்றும் விடுமுறை வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த நிலையில் விடுமுறை வழங்கப்படவில்லை. ஆனால் தமிழகத்தில் இன்று இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது ராமநாதபுரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை கோவில் திருவிழாவை முன்னிட்டு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதன் இன்று இந்த 2 மாவட்டங்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் பொங்கல் பண்டிகைக்கு மொத்தம் 9 நாட்கள் விடுமுறை வந்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.